நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 11வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது :
நாட்டை பாதுகாக்கவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் பலர் பணியாற்றுகின்றனர். நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த கதாநாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து 40 கோடி இந்தியர்கள்தான் போராடினர். தற்போது 140 கோடி மக்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது.
பேரிடர்களில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு தேசமே துணை நிற்கிறது . செங்கோட்டை முதல் கடைக்கோடி கிராமம் வரை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் திட்டம் மூலம் குறுகிய காலத்தில் 12 கோடி இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
2.50 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2040க்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது வெறும் வெற்று முழக்கம் அல்ல 140 கோடி மக்களின் கனவு.
வளர்ச்சி அடைந்த பாரதத்திற்காக நாட்டு மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். நமது பல்வேறு திட்டங்களின் மூலம் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பயனடைந்துள்ளனர்- பிரதமர் மோடி.
இந்திய நீதித்துறையில் நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். நீதித்துறைக்கு வலிமை சேர்க்க மாற்றங்களை கொண்டுவர வேண்டும். சிறப்பான சீர் திருத்தங்களை மேற்கொள்வதற்காக புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
வங்கித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர். இதனால் வங்கித்துறை மேலும் வலிமை அடைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பல மோசமான பேரிடர்களை எதிர்கொண்டு வந்தாலும், அதில் இருந்து மீண்டு வருகிறோம். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணைநிற்போம். பேரிடர் காலங்களில் உறவுகளை இழந்தவர்களுக்கு இந்த தேசம் துணை நிற்கும்
இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்றால் உள்நாட்டு உற்பத்தியில் சிறந்து விளங்க வேண்டும்.
உலகளவில் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற புகழை இந்தியா விரைவில் அடையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.