மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் எதிரே வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியதில் 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் கல்யாணை நோக்கி மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு 11.30 மணியளவில் புனே மாவட்டத்தில் உள்ள பிம்பல்கான் ஜோகாவிற்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில் எதிரே வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஆட்டோவில் பயணித்த 7 பேர், மினி வேன் ஓட்டுனர் என மொத்தம் 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.