நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 85 வயது மூதாட்டி நூறு அடி கிணற்றில் சிறிதும் அச்சமின்றி டைவ் அடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஆசாரி பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி பாப்பா கூலிவேலை செய்து வருகிறார். இவர் 5 வயது முதலே நீச்சல் கற்றுள்ளார். தற்போது 85 வயதிலும் துணிச்சலுடன் கிணற்றில் டைவ் அடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் நீச்சல் அடிப்பதில் அதிக ஆர்வம் உள்ளதால். அப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு நீச்சல் பழகி கொடுத்து வருகிறார். 85 வயது மூதாட்டி கிணற்றில் டைவ் அடித்து நீச்சல் அடிப்பதை சுற்றுவட்டார மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து அந்த மூதாட்டி கூறுகையில், தன் அப்பாவிடம் இருந்து கற்ற அனைத்து வகையான நீச்சலையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தி வருவதாகவும், ஆபத்துக்கு உதவக்கூடிய நீச்சல் `கலை என்பது அனைவராலும் கற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.