பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், தமிழகம் முழுவதும் 97.7 சதவீத (97.7% buses) பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.30 லட்சம் போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு போக்குவரத்து சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து கடந்த 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தி வரும் இந்த போராட்டத்தில், பங்கேற்காது என ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கத்தின் முதன்மை பொதுச்செயலாளர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்காத தொழிற்சங்களை ஒருங்கிணைத்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அவர்கள் மூலம் தமிழ் நாட்டில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் 97.7 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ் நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
https://x.com/ITamilTVNews/status/1744718777085046920?s=20
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை எதிர்வரும் 12ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவுள்ளனர்.
இதற்கிடையே போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்க : https://itamiltv.com/how-did-the-tamil-nadu-government-achieve-the-bus-transport-amid-the-huge-strike/
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 97.7 சதவீத பேருந்துகள் (97.7% buses) இயக்கப்படுவதாக தமிழ் நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் இயக்கப்பட வேண்டிய 15,226 பேருந்துகளில் 14,888 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சேலம் பணிமனைகளில் இருந்து 794 பேருந்துகளில் 775 பேருந்துகளும், கோவை பணிமனைகளில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 1870 பேருந்துகளில் 1787 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
சென்னையில் மாநகர பேருந்து 97.68 சதவீதம் பேருந்துகளும், விழுப்புரம் பணிமனைகளில் இருந்து 1779 பேருந்துகளில் 1763 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 97.7% பேருந்துகள் இயக்கப்படுகிறது.