தமிழ்நாடு முழுவதும் 97 பேருக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறி உள்ளது என்று மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான், அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த ஒமைக்ரான் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதோடு பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் இதுவரை புதிய வகை கொரோனாவான ஒமைக்ரானின் மொத்த பாதிப்புகள் 450 ஐ தாண்டியுள்ளது. இதனிடையே தமிழ்நாடு முழுவதும் 97 பேருக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறி உள்ளது என்று மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒமிக்ரான் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாகவும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
ஊரடங்கு தொடர்பாக வரும் 31 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் ஆலோசனைக்கு பிறகு இரவு நேர ஊரடங்கு போடலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.