ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக ஏ. எம். சிவப்பிரசாந்த போட்டிடுவார் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் உடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளரான 29 வயது இளைஞர் எ.எம். சிவபிரசாந்த குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் பெருமான சண்முகவேல் தலைமையில் 294 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரத்தில் முழ வீச்சில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, உங்க கூட்டணி கட்சிகளுக்கு எதிராகவும், இந்த ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லி சேகரிக்க உள்ளதாக தெரிவித்த அவர், தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்வது பண பலத்தை விட மக்கள் பலம் தான் என அதிமுகவின் கூறினார்.
சின்னத்தையும், கட்சியையும், அதன் கொள்கைளையும் சுயநலத்திற்காக, பதவி வெறி பிடித்து கட்சியின் சட்ட விதிகளுக்கு மாறாக அக் கட்சியில் உள்ளவர்கள் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.