62 வயது முதியவர் ஒருவர் தனது மகளையே (own daughter) திருமணம் செய்ததாக வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த வீடியோ போலியானது என தெரியவந்துள்ளது.
டெல்லியில், 62 வயது முதியவர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு இந்துக் கடவுள் பிரம்மாவை பின்பற்றி தனது மகளை (own daughter) திருமணம் செய்து கொண்டதாக வீடியோ ஒன்று வைரலானது.
அந்த வீடியோவில் முதியவரும், இளம் பெண்ணும் திருமக்கோலத்தில் கழுத்தில் மாலையுடன் இருக்கும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்த வீடியோவை முதலில் டிரோல் என்ற டுவிட்டர் கணக்கில் கடந்த டிசம்பவர் 25ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 17ம் தேதி டெக்பரேஷ் (Techparesh) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் டெக்பரேஷ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் பெண்ணை முதியவர் ஒருவர் திருமணம் செய்வதுபோன்று, மூதாட்டி ஒருவர் இளைஞரைத் திருமணம் செய்துபோன்ற வீடியோவும், இரண்டு பெண்கள் ஒரு ஆணை திருமணம் செய்வது போன்ற வீடியோவும் உள்ளது.
மேலும், இதுபேன்ற திருமணம் தொடர்பான வீடியோக்கள் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகம் இருந்தது. இந்நிலையில், முதியவரை திருமணம் செய்த வீடியோவில் இருக்கும் பெண் வேறொரு வீடியோவிலும் இருக்கிறார்.
https://www.instagram.com/reel/CmRoLT5LQad/?utm_source=ig_web_copy_link
அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொள்வதாகப் பதிவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதுபோன்ற வீடியோக்கள் வைரல் செய்வதற்காகத் திட்டமிட்டு எடுக்கப்படும் ஸ்கிரிப்ட் வீடியோக்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தான் 62 வயது முதியவர் ஒருவர் தனது மகளையே திருமணம் செய்வதுபோன்று இருக்கும் வீடியோ திட்டமிட்டு வைரல் செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.