தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வானிலை மைய கணிப்புபடி நாளை புயலாக மாறும்பட்சத்தில் ‘FENGAL’ என பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறுகிறது.
Also Read : CA தேர்வு தேதியை மாற்றியது இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம்..!!
வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ‘Fengal’ என்ற பெயர் சூட்டப்பட உள்ளது.
Fengal புயல், இலங்கை கடற்கரையை தொட்டபடி தமிழ்நாட்டை நோக்கி நகரும் இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 நாட்கள் மிக கனமழை பெய்யும்.
இந்த புதிய புயலின் போது 12-20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 4 மாவட்டங்களுக்கு 3 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.