மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பூந்தாழையில் மகா சுடலை காளியம்மன் கோவில் உள்ளது .இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் நடந்தன . திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 21 – ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.
இன்று 4 – வது கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து மகா தீபாராதனை பூர்ணாஹீதி நடைபெற்று, கடங்கள் புறப்பாடு நடந்தது. பின்னர் கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது . விழா ஏற்பாடுகளை கோவில் பூசாரி, மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. குடமுழுக்கையொட்டி பொறையார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் கோவிலுக்கு பா.ஜ.க. ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் கிடங்கல் ராஜ்மோகன் அவர்களால் 8 அடி உயரம் உள்ள சூலம் வழங்கப்பட்டது. அவருடன் பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.