நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் காட்டு யானை கூட்டம் (wild elephants) இரவு நேரத்தில் வாகனங்களை வழிமறித்த நிலையில், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சமீப காலமாக காட்டு யானை கூட்டம் (wild elephants) வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் முள்ளூர் பகுதியில் இரவு நேரத்தில் காட்டு யானை கூட்டம் சாலையில் உலா வந்து வாகனங்களை மறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உலா வந்த காட்டு யானைகள் எவ்வித அச்சமும் இன்றி வாகனங்களை நோக்கி வந்து சாலையில் நின்று கொண்டிருந்த சில வாகன ஓட்டிகளை நோட்டமிட்டு துரத்தும் விதமாக உலா வந்தது.இந்த காட்சியை அவ்வழியாக பயணித்த மற்றொரு வாகனத்தில் இருந்த நபர் வீடியோ எடுத்து உள்ளனர்.
எனவே, சாலையில் உலா வரும் காட்டு யானை கூட்டம் யாரையாவது தாக்கும் முன் வனத்துறையினர் வாகன மூலம் ரோந்து மேற்கொண்டு அடர்ந்த வனப்பகுதியில் யானைக் கூட்டத்தை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.