வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்துகுறிப்பில் கூறியதாவது :
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஊர்வாகியுள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 5 நாட்கள் மிதமான மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .
மேலும் வடமாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழையும், சில இடங்களில் அதிக கனமழையும் பெய்ய வாய்ப்பு வங்கக்கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.