முன் அறிவிப்பின்றி ஒரே இமெயில் மூலம் தனியார் நிறுவனம் ஒன்று 2,000 பேரை பணிநீக்கம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Focus Edumatics என்ற ஆன்லைன் கல்வி நிறுவனம் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு நிறுவனத்தை உடனடியாக மூடுவதாக பணியாளர்களுக்கு இமெயில் மூலம் தெரிவித்துள்ளது .
இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் தங்களது ஊதியம் மற்றும் எதிர்காலம் குறித்து அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read : அச்சுறுத்தும் குய்லின்-பார் சிண்ட்ரோம் என்ற அரிய வகை நோய் – புனேவில் முதல் உயிரிழப்பு பதிவு..!!
இந்நிலையில் தங்களது எதிர்காலம் குறித்து அரசிடம் ஊழியர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில் இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.