100 ஆண்டுகளுக்குப் பிறகு தென்பட்ட அரியவகை உயிரினம்.. வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்!

இங்கிலாந்து நாட்டில், 100 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட அரியவகை பட்டாம்பூச்சி இனம் மீண்டும் பொதுமக்களின் கண்களில் தென்பட்டு இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்ட முட்டைக்கோஸ் பட்டாம்பூச்சிகள் எனப்படும் இனத்தைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் இரண்டாம் சார்லஸ் மன்னரின் காலத்தில் அரிய வகையாக அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு, 1925ம் ஆண்டில் இந்த வகை பட்டாம்பூச்சி வகைகள் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த தனித்துவமிக்க முட்டைக்கோஸ் பட்டாம்பூச்சிகள் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் பொதுமக்கள் பார்வையில் தென்பட்டதாக பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வகை முட்டைக்கோஸ் பட்டாம்பூச்சிகளைப் பார்ப்பது வியப்பாக இருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Total
0
Shares
Related Posts