தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை கடல் கடந்து வந்து கொலை செய்ததுடன் வீடியோ வெளியிட்டு ஏன் கொலை செய்தேன் என்ற விளக்கத்தையும் வீடியோ மூலம் தந்தை தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் அன்னமையா மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவர் தனது மனைவி சந்திரகலாவுடன் குவைத்தில் வேலை செய்து வரும் நிலையில், தனது 12 வயது மகளை உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார்
இந்நிலையில், கடந்த வாரம் வீட்டில் சிறுமி தூங்கிக் கொண்டு இருந்தபோது அதே வீட்டைச் சேர்ந்த ஆஞ்சநேயுலு என்ற 59 வயது மாற்றுத்திறனாளி தனது பேத்தி வயதான அந்த சிறுமியின் வாயில் துணியை வைத்து அழுத்தி உள்ளார்.
தொடர்ந்து அவர் சிறுமியை பாலியியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்; ஆனால், சிறுமியின் சத்தம் கேட்டு உறவினர்கள் வந்துள்ளனர். பின்னர், அந்த சிறுமி நடந்த விவரங்களை குவைத்தில் உள்ள தனது தாய் சந்திரகலாவுக்கு போன் செய்து கூறிய உடன் இந்தியாவுக்கு திரும்பிய அவர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஆஞ்சநேயலுவை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரை கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர்.
Also Read : தமிழ்நாடு அரசின் சிறப்பு பொங்கல் தொகுப்பு அறிவிப்பு..!!
இந்நிலையில், மீண்டும் குவைத்திற்கு திரும்பிய சந்திரகலா நடந்த விவரத்தை கணவர் பிரசாத்திடம் கூறியுள்ளார் . அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரசாத் 4 நாட்கள் விடுமுறையில் யாருக்கும் சொல்லாமல் இந்தியா வந்து, தூங்கிக் கொண்டுருந்த ஆஞ்சநேயலுவை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்துவிட்டு யாருக்கும் தெரியாமல் மீண்டும் குவைத் சென்று உள்ளார்
இந்நிலையில் ஆஞ்சநேயலு எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று தெரிய வேண்டும் என்பதனால் குவைத்தில் இருந்து பிரசாத் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்
பெண் பிள்ளைகள் மீது கை வைத்தால் அவரது தந்தையோ, அண்ணனோ, தம்பியால் இதுபோன்ற நிலை ஏற்படும் என்ற பயம் தவறு செய்பவர்களுக்கு இருக்க வேண்டும் எனக்கூறி நடந்த விவரங்களுடன் விளக்கமளித்துள்ள பிரசாத், தவறு செய்தேன் அதற்குண்டான தண்டனை சட்டப்படி நான் ஏற்கத் தயாராக உள்ளேன் எனவும் கூறியுள்ளார்
எனது தண்டனையை பெற விரைவில் இந்தியா வந்து போலீசில் சரண் அடைவதாகவும், இந்த வீடியோவை முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அனைத்து ஊடகத்தினரும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும் பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார்.
மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை கடல் கடந்து வந்து கொலை செய்ததுடன் வீடியோ வெளியிட்டு ஏன் கொலை செய்தேன் என்ற விளக்கத்தையும் வீடியோ மூலம் தந்தை தெரிவித்துள்ள நிலையில் இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தும் சட்டத்தை கையில் எடுப்பது தவறு என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்ததும் வருகின்றனர்.