திருப்பூர் அருகே கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடன் பயிலும் மாணவிகளை விபச்சாரத்திற்கு தள்ளுவதற்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன காலக்கட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. இதில் ஒருசில இளம்பெண்களே தனது தோழிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் என்றால் சற்று மனதை பதறவைக்கிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் ஒரு பிரபலமான கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவிகள் சிலர், தங்களுடைய போட்டோக்களை வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வந்தனர்.
விபச்சாரம் இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, இந்த கல்லூரி மாணவிகள் 2 பேரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய நபர்கள், இந்த 2 பெண்களையும் விபச்சாரத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 மாணவிகளும் அதிர்ந்தனர். அதனால், இது பற்றி தங்களுடன் படிக்கும் தோழிகளிடம் கண்ணீருடன் இதை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, கல்லூரி நிர்வாகத்திடமும் புகார் செய்து, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் தரப்பில், மாணவிகளிடம் பேசிய அந்த மர்ம நபர்கள் யார் என்ற விசாரணையில் இறங்கினர்.. அப்போதுதான், அதே கல்லூரியில் படிக்கும் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.ரம்யா வின் பெயரை கேட்டதுமே கல்லூரி நிர்வாகத்தினரும், மாணவிகளும் உறைந்து போயினர். பிறகு ரம்யாவிடம் விசாரணை ஆரம்பமானது.
அப்போதுதான் அவரது அனைத்து தில்லுமுல்லு வேலைகளும் வெளியே வந்தது. ஆண் நண்பர்கள் ரம்யாவுக்கு நிறைய ஆண் நண்பர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கல்லூரியில் பல மாணவிகளிடம் சகஜமாக பேசி பழகியுள்ளார்.
இவரது பழகும் விதம், அனைத்து மாணவிகளுக்கும் பிடித்து போய்விட்டது. அதனால், மாணவிகள் தங்கள் செல்போன் நம்பர்களை ரம்யா விடம் பரிமாறி கொண்டிருக்கிறார்கள். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரம்யா, அங்கு படித்து வந்த சீனியர் மாணவிகள் 2 பேரின் போட்டோக்களை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்சில் இருந்து டவுன்லோடு செய்து அதனை தன்னுடைய ஆண் நண்பர்களுக்கு, அனுப்பி வைத்துள்ளார்.
அத்துடன் மாணவிகளின் செல்போன் நம்பரையும் அனுப்பி வைத்துள்ளார். அட்வான்ஸ் அந்தவகையில், மாணவிகள் 2 பேரிடமும் பேசிய ரம்யாவின் ஆண் நண்பர்கள் விபச்சாரத்திற்கு அழைத்து, அதற்கு விலையும் பேசியுள்ளனர்.. அதுமட்டுமல்ல, இதற்காக ரம்யா, அந்த ஆண் நண்பர்களிடம் முன்கூட்டியே அட்வான்ஸ் பணமும் பெற்றுள்ளார்.
இதையடுத்து ரம்யாவின் செல்போனை கல்லூரி நிர்வாகத்தினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகளின் போட்டோக்களை ரம்யா அதில் வைத்திருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தனர். எனவே உடனடியாக ரம்யாவை கல்லூரியை விட்டு டிஸ்மிஸ் செய்துவிட்டனர்.
இப்போது, ரம்யாவால் எத்தனை மாணவிகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்? அந்த ஆண் நண்பர்கள் யார்? என்ற விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இவ்வளவு விசாரணைகளையும், கல்லூரி நிர்வாகம் மட்டுமே நடத்திமுடித்து கண்டுபிடித்துள்ளது. இதுவரை போலீசுக்கும் போகவில்லை. புகார் எதுவும் செய்யப்படவில்லை.
ஆனாலும் ரம்யாவுடன் தொடர்பில் இருந்த ஆண் நண்பர்கள் யார்? இதுவரை ரம்யாபால் அனுப்பப்பட்ட சக மாணவிகளின் போட்டோக்கள் ஏதாவது விபச்சார கும்பலிடம் உள்ளதா? என்று சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவிகள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.