ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் ரீல்ஸ் செய்ய முயற்சித்த 17 வயது மாணவன் ரயிலில் அடிபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன காலத்தில் சமூக வலைதளங்களில் இளம் தலைமுறையினர் அதிகமாக ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். பிரபலமடையவேண்டும் என்பதற்காக பல்வேறு விபரீத சாகசங்களையும் செய்து வருகின்றனர். இந்த விபரீத சாகசங்களால் பலர் உயிரையும் இழந்துள்ளனர்.பலருக்கு உடலில் பலமான காயங்களும் ஏற்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், தெலங்கானா மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்தவர் அக்ஷய் ராஜ். 12ஆம் படித்து வரும் அக்ஷய், சமூகவலைத்தளங்களில் ரொம்பவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில், ஓடும் ரெயில் அருகே நெருங்கி ஆக்ஷன் ஹீரோவாக போஸ் கொடுத்து ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்று உள்ளார். அப்போது வேகமாக வந்த ரெயில் அவர் தலை மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
வீடியோ எடுத்த நபர் பதறியதை கண்டும், ரெயில்வே தண்டவாளத்தில் அக்ஷய் இரத்தத்துடன் இருப்பதையும், ரெயில்வே போலீஸ்காரர் ஒருவர் கவனித்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அகஷய் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அக்ஷய் பின்னர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
காசிப்பேட்டை ரெயில்வே போலீசார் கூறுகையில், அக்ஷய் தனது இரண்டு நண்பர்களுடன் இன்ஸ்டாகிராம் வீடியோ எடுக்க பல்ஹர்ஷாவில் இருந்து வாரங்கல் செல்லும் ரெயில் செல்லும் பாதையில் நின்று உள்ளார்.அப்போது வேகமாக சென்ற ரெயில் தலையில் ரெயில் மோதி உள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதே போன்று கடந்த மே மாதம், வேலூர் மாவட்டத்தில் செல்பி வீடியோ எடுக்க முயன்ற 22 வயது வசந்த குமார் என்பவர் ரெயிலில் அடிபட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்த தனது சமூக ஊடக தளங்களுக்கு ரீல்கள் மற்றும் வீடியோக்களை தயாரித்து, கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/VishalDharm1/status/1566470675706945541?s=20&t=UD_dQmA98MuLC0liBRBOpw