செங்கல்பட்டு மாவட்டத்தில் சரக்கு லாரி கவிழ்ந்த விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று செங்கல்பட்டு இருங்குன்றப்பள்ளி தனியார் பீர் கம்பெனிக்கு காலி பாட்டில்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. ராணிப்பேட்டையில் இருந்து சென்று கொண்டிருந்த இந்த சரக்கு லாரி காட்டாங்கொளத்தூர் அருகே வந்த போது சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சரக்கு லாரியின் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்துவிட்டது.
இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி, சாலையில் சென்டர் மீடியன் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் பீர் பாட்டில்கள் முழுவதும் சாலையில் சிதறியது. தகவல் அறிந்து வந்த மறைமலை நகர் போலீசார் பாட்டில்களை அகற்றினர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.