கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவிற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் சேர்ந்து புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை திறந்து வைத்தனர்.
இதையடுத்து விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :
வைக்கம் போராட்டம் என்பது கேரளத்துக்கான போராட்டம் மட்டும் அல்ல, இந்தியாவில் தொடங்கிய சமூகநீதி போராட்டத்திற்கான தொடக்கப்புள்ளி.
சமூக சீர்த்திருத்த போராட்டங்களில் இதுபோன்ற ஒருங்கிணைப்பு இருந்தால் வெற்றி பெற முடியும் என்பதற்கு மாபெரும் எடுத்துக்காட்டு வைக்கம் போராட்டம்.
100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் முன்னேறி இருக்கிறோம். ஆனால் இன்னும் நாம் வெகுதூரம் முன்னேறி செல்ல வேண்டிய இருக்கிறது.
Also Read : பக்தர்களின் நலன்கருதியே மலை மீது ஏற தடை – திருவண்ணாமலை ஆட்சியர் விளக்கம்..!!
பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை நாம் தொடர வேண்டும். யாரையும் தாழ்த்திப்பார்க்காத சமத்துவ சிந்தனை, பகுத்தறிவு, மக்கள் மனதில் மலர வேண்டும்.
எல்லோருக்கும் எல்லாம் என்பதை சமத்துவ கொள்கையாக மட்டுமில்லாமல் ஆட்சியின் கொள்கையாகவே தமிழ்நாட்டில் அறிவித்துள்ளோம்.
பெரியாரின் வைக்கம் போராட்டம் மிக முக்கியமானது என அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டார்.
வைக்கம் போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பல கோயில் நுழைவு போராட்டங்கள் நடந்ததற்கு பெரியாரே காரணம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.