இன்ஸ்டாகிராமில், பெண் ஒருவர் சைக்கிள் ஒட்டிக்கொண்டே நடனமாடும் (bicycle dance) வீடியோ அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில், புஷ்ரா என்ற இளம் பெண் ஒருவர், ஒரே நேரத்தில் சைக்கிள் ஓட்டிக்கொண்டே பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடும் வீடியோ (bicycle dance) வைரலாகி நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
https://www.instagram.com/reel/CmlXZoOqX3X/?utm_source=ig_web_copy_link
புஷ்ரா தனது iamsecretgirl023 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் 7.45 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.
அதில், அவர் இதுபோன்று சைக்கிள் ஓட்டும்போது நடனமாடும் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். மேலும், சுதந்திர தினத்தன்று அவர் தேசியக் கொடியை அசைத்துக் கொண்டே நடனமாடும் வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும், புஷ்ரா அந்த வீடியோவில், பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு சாலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டே வளைந்து நெளிந்து நடனமாடுகிறார். சைக்கிளின் கைப்பிடியை கூட பிடிக்காமல், இரு கைகளையும் பயன்படுத்தி சைக்கிளை பேலன்ஸ் செய்து கொண்டே நடனமாடுகிறார்.
இந்நிலையில், இவரின் இந்த திறமையை நெட்டிசன்கள் பலரும் பாராட்டினாலும், மற்றொரு தரப்பினர் பேலன்ஸ் தவறினால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளதால் எச்சரிக்கையாகவும் இருக்குமாறும் பலரும் அறிவுறுத்தியுள்ளனர்.