சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
கனமழை எதிரொலியாக பாலகங்கள் 24 மணி நேரமும் இயங்க ஆவின் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அம்பத்தூர், அண்ணாநகர், மாதவரம், வண்ணாந்துரை, வசந்தம் காலனி, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், சி.பி.ராமசாமி சாலை ஆவின் பாலகம் 24 மணி நேரமும் செயல்படும்.
Also Read : புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் – முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..!!
அதிகபட்சமாக ஒருவருக்கு 4 பால் பாக்கெட்டுகள் வரை வாங்கிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆவின் பால் பவுடர்கள் போதுமான அளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தேவைப்படும் இடங்களில் தற்காலிக ஆவின் பால் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்
தங்குதடையின்றி பால் விநியோகம் செய்ய அனைத்துவித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.