சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை அபிநயா ராஜராஜன் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று முதல் தொடங்கி அனல் பறக்க நடைபெற்று வருகிறது .
சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் சிறப்பாக நடைபெற்று வரும் இந்த மாபெரும் தடகள தொடரில் 7 நாடுகளிலிருந்து 174 வீரர் – வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.
Also Read : பொங்கல் விடுமுறையையொட்டி ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்..!!
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து போட்டியினை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற தமிழக வீராங்கனை அபிநயா ராஜராஜன் 11.77 நொடிகளில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்த அபிநயா ராஜராஜனுக்கு தற்போது பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.