கலாக்ஷேத்ரா விவகாரத்தில் மாணவிகளுக்கு நிகழ்ந்த போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு கொடுத்து வரும் தருணத்தில் அனைத்திற்கும் எதிராக குறிப்பாக கலாக்ஷேத்ராவிற்கு எதிராக பேசப்படும் எல்லாம் உண்மையா? என்று ஐயத்தை ஏற்படுத்தும் விதமாக நடிகை அபிராமி வெங்கடாச்சலம் (abhirami) தற்போது ஒரு பேட்டி அளித்திருக்கிறார் !
இதுகுறித்து நடிகை அபிராமி அளித்துள்ள பேட்டியில்..,
கலாக்ஷேத்ராவின் முன்னாள் மாணவிதான் நான் என்றும், இங்கு நடக்கும் தவறுகளுக்கு சரியான பதிலானது ஒருதலை பட்சமாக இருக்கிறது. எல்லோருக்கும் குடும்பம் மனைவி குழந்தைகள் உள்ளது. குறிப்பாக, இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் பத்மனாபனுக்கும் ஒரு பெண்குழந்தை உள்ளது.
எனவே, அவரை அவதூறு பேசும் முன்பு அவர் தரப்பு நியாயங்களையும் கேட்கவேண்டும் அல்லவா? அவரை பேசக்கூட விடாமல் அவர் மீது குற்றம் சாட்டுவது எந்தவிதத்திலும் நியாயமாகாது. எனவே, கலாக்ஷேத்ராவின் பெயரை ஒழுங்காக உச்சரிக்கக்கூட தெரியாதவர்கள் எல்லாம் இந்த நிகழ்வினை பெரிது படுத்துவது மிகவும் வறுத்தமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் உனக்கு என்ன தெரியும்? என்றும், குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவு அளிக்க இப்படி நடந்துகொள்கிறார் அபிராமி (abhirami) என்றும் வசை பாடி வருகின்றனர். இது குறித்து உங்கள் கருத்துகளை Comment பக்கத்தில் பதிவிடுங்கள்…