டிசம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரையிலான காலகட்டத்தில் நாட்டில் இயல்பைவிட குறைந்த குளிரும், ஒருசில பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக மழையும் பதிவாகலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (india Meteorological Department)தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்தஞ்சய் மொஹபத்ரா,”வடக்கு, வடமேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் குளிர் அலைகள் ஏற்படுவது இந்த காலகட்டத்தில் இயல்பைவிட குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் நாடு முழுவதுமே பரவலாக டிசம்பர் மாதத்துக்கான சராசரி வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.மழையைப் பொருத்தவரை, வழக்கத்தைவிட சற்று அதிகமான அளவில் இந்த காலகட்டத்தில் மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிசம்பர் 2023-ல் வடமேற்கு, மத்திய, கிழக்கு இந்தியாவிலும் தென் இந்தியாவின் சில பகுதிகளிலும் மழையளவு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். வடகிழக்கு, வடக்கு, மத்திய இந்தியாவை ஒட்டிய சில பகுதிகளில் வழக்கத்தைவிட குறைவாகவே மழையளவு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.