ஆம்பூர் அருகே வீட்டுப்பாடம் எழுதி வரவில்லை என்று UKG பள்ளி மாணவனை பிரம்பால் சரமாரியாக தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியை பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடைய ராஜபாளையம் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியொன்று இயங்கி வருகின்றது. அங்கு மாதனூர் பகுதியை சேர்ந்த சதீஷ்-இளவரசி தம்பதியினரின் மகன் சர்வின் UKG பயின்று வருகிறார்.
நேற்று பள்ளிக்கு சென்று அவரை வீட்டுப்பாடம் எழுதி வரவில்லை என்று மானவர் சர்வினை, அவரது பள்ளி ஆசிரியை சத்தியா பிரம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கை மற்றும் உடல் முழுவதும் காயங்களுடன் வீட்டுக்கு சென்ற மாணவன் சர்வினை கண்ட அவர்களின் பெற்றோர் மகனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக பள்ளிக்கு சென்ற பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் அந்த ஆசிரியர் முறையிட்டுள்ளனர். அதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர், வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு பள்ளி ஆசிரியை சத்யாவை பள்ளி இருந்து பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கின்றனர்.
மேலும் பள்ளி ஆசிரியை சத்யாவிடம் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.