Actor Ajith Kumar : நடிகர் அஜித்குமார் இன்று திடீரென சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் மாஸ் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தல அஜித் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில், ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க : Friday 08.03.24 : தியேட்டர் மற்றும் OTT ரிலீஸ் படங்களின் லிஸ்ட்!!
இந்த படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு வெளிநாட்டில் தான் படமாக்கப்பட்டு வருகிறது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா இணைந்துள்ளார் நீண்ட இடை வேளைக்கு பின்னர், த்ரிஷா அஜித்துடன் இணைந்து நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிக் பாஸ் ஆரவ், நடிகை ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : ”நிக்க வச்சு சுடணும்” என்கிற மக்களின் உணர்வுடன் ஒத்துப் போகிறேன் -ஆளுநர் தமிழிசை!
இந்நிலையில் தான் இன்று நடிகர் அஜித் திடீரென சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஹனால், தல அஜித்துக்கு என்ன தான் ஆச்சு? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு, வருகிற மார்ச் 15ஆம் தேதி முதல் அஜர்பைஜான் நாட்டில் துவங்க உள்ளதால், அஜித் (Actor Ajith Kumar) வெளிநாடு செல்ல வேண்டியுள்ளது.
இதையும் படிங்க : பாஜக கூட்டணியில் இணைகிறதா பிஜூ ஜனதா தளம்.
அதற்காகத் தான் வழக்கமான பரிசோதனை மேற்கொள்வதற்காக அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகே ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.