தமிழ் திரையுலகில் இருக்கும் பல புகழ் பெற்ற நடிகர்களின் சம்பள விவரங்களை கேட்டால் தலை சுற்றி போய்விடும் . அதிலும் குறிப்பாக நம்ப தளபதி விஜய் தளபதி 68 படத்துக்கு 200 கோடி சம்பளம் வாங்கப் போவதாக வந்த தகவலை கண்டு இந்திய திரையுலகமே ஆடி போய் உள்ளது .
இந்நிலையில் தற்போது அதை விட ஷாக்கிங்கான தகவல் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் உள்ளது .

உலகம் போற்றும் உலகநாயகனாக வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் தெலுங்கு படத்தில் வெறும் 20 நாட்கள் நடிக்க 150 கோடி சம்பளம் வாங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .
ஏற்கனவே விக்ரம் என்ற சூப்பர் டூப்பர் படத்தை தயாரித்து , நடித்து இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் முழு வீச்சில் நடித்து வருகிறார் .
இந்நிலையில், நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பாகுபலி பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்ட படமான ப்ராஜெக்ட் கே படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கப் போகிறாராம் .

அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் என பான் இந்தியா படமாக உருவாகி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கமல்ஹாசனின் சம்பள விவரம் வெளியாகி அனைவரையும் கலங்கடித்துள்ளது .
இந்த படத்தில் உலகநாயகன் வில்லனாக நடித்தால் தான் நன்றாக இருக்கும் என முடிவு செய்த இயக்குநர் நாக் அஸ்வின் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி பெரிய தொகைக்கு அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த கமல்ஹாசன் தற்போது வில்லனாக களமிறங்க உள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
எது எப்படி இருந்தாலும் இதுவரை நமக்கு வந்த தகவல் எதுவும் அதிகாரபூர்வமாக வரவில்லை அதனால் இந்த தகவல் உண்மையா? இல்லை உருட்டா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

இந்த பக்கம் சற்று கூர்ந்து பார்த்தால் நம்ப தளபதிக்கு தளபதி 68 படத்தில் 200 கோடி சம்பளம் என சில தினங்களுக்கு முன்பு வெளியான தகவல்களை தயாரிப்பு நிறுவனமோ விஜய் தரப்போ இதுவரை மறுக்கவில்லை.
இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் நிச்சயம் பிரபாஸ் படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் என்றும் அவருக்கு பெரிய தொகை சம்பளமாக கிடைக்கப்போகிறது என்ற தகவல் தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .