வாரிசு நடிகராக திரையுலகில் அறிமுகமான நடிகர் பிரபு அவரது தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போலவே தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார்.
இவருக்கு விக்ரம் என்கிற மகனும் ஐஸ்வர்யா என்கிற மகளும் உள்ளனர். விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு அவரின் உறவினர் குணால் என்பவருடன் திருமணம் நடந்து முடித்து. ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு பின்னர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து, தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்து, சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் இயக்குனரும், தல அஜித்தின் தீவிர ரசிகருமான ஆதிக் ரவிச்சந்திரனும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து வந்துள்ளனர்.
இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்களின் திருமண பணிகளில் குடும்பத்தினர் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.