தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன் தற்போது தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு , சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நடிப்பு , நடனம் , பாடல் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் இவரது நடிப்பில் தற்போது ஏராளமான திரைப்படங்கள் தரமாக தயாராகி வருகிறது.
Also Read : அமெரிக்காவிற்கு சிறப்பு சலுகைகளை அறிவித்த பனாமா அரசு..!!
இந்நிலையில் நடிகர் சிம்பு இன்று தனது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் தான் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
ATMAN CINE ARTS என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடக்கி உள்ளதாகவும் தனது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் யுவன் இசையில் உருவாகும் தனது 50 ஆவது படத்தை தானே தயாரிக்க உள்ளதாகவும் நடிகர் சிம்பு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.