விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தொகுதி வேட்பாளர் டாக்டர் ஆர்.ரவிக்குமாருக்கு நடிகர் சிவக்குமார் (sivakumar) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு நடிகர் சூர்யாவின் தந்தையான நடிகர் சிவக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். “தனித்து நின்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் ரவிக்குமார் போன்றவர்களை தமிழ் மக்கள் தேர்வு செய்து பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்” என அவர் வாழ்த்து தெரிவித்ததாக, ரவிக்குமார் தனது எக்ஸ் தளத்தி பதிவிட்டுள்ளார்.
Also Read : https://itamiltv.com/a-snake-on-a-bike-public-panic/
‘ஜெய்பீம்’ படத்தின்போது நடிகர் சூர்யாவுக்கு எதிராகக் கிளம்பிய பிரச்னைகளில், சூர்யாவிற்கு ஆதரவாக விசிகவினர் இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நன்றி உணர்வால் தற்போது வாழ்த்து (sivakumar) சொல்லியதாகக் கூறப்படுகிறது.