பிரபல தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலனான ஆண்டனி தட்டிலை இன்று கரம்பிடித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் , தெலுங்கு என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் நீண்ட கால நண்பருடன் நீண்ட நாட்களாக காதலில் இருப்பதாக கூறப்பட்டது. மறுபுறம் இது வெறும் வதந்தி என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் தனக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்த பின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதையடுத்து இன்று தனது நீண்ட நாள் காதலனான ஆண்டனி தட்டிலை நடிகை கீர்த்தி சுரேஷ் கரம்பிடித்துள்ளார். கோவாவில் இவர்களது திருமணம் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது.