விவாகரத்தில் முடிந்த சமந்தாவின் காதல் திருமணம்

actress samantha confirms divorce with naga chaitanya

தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வரும் சமந்தா, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான ஏ மாயம் சேசாவே என்ற படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். பின் நண்பர்களாக இருந்த இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்த பெயரை சமந்தா அக்கினேனி என்று மாற்றிக் கொண்டார்.
இந்நிலையில், திடீரென ஒருநாள் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் சமந்தா அக்கினேனி என்ற பெயரை நீக்கி வெறும் ‘S’ என்று மாற்றினார்.

actress-samantha-confirms-divorce-with-naga-chaitanya
actress samantha confirms divorce with naga chaitanya

அதனை தொடர்ந்து நாக சைதன்யாவும், சமந்தாவும் விவாகரத்து செய்யவிருப்பதாக கடந்த ஒரு மாதமாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் இது குறித்து இருவரும் எந்த கருத்துக்களையும் தெரிவிக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நானும், நாக சைதன்யாவும் பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். நண்பர்களும் நலம் விரும்பிகளும் இந்த கடினமான காலகட்டத்தில் எங்களை ஆதரியுங்கள். எங்களுக்கு சுதந்திரம் கொடுத்து இதனை எளிதாக கடந்துபோக உதவுங்கள் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts