தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து பேமஸ் ஆன நடிகைகளில் ஒருவர் தான் நடிகை விஜய லட்சுமி . சென்னை 28, அஞ்சாதே, போன்ற பல படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரையிலும் தனது திறமையை காட்டி மக்களின் மனதை கவர்ந்துள்ளார் .
இந்நிலையில் சினிமா துறைகளில் இருக்கும் நடிகைகளை எந்த வித கூச்சமும் இல்லாமல் படுக்கைக்கு அழைப்பது அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பல கஷ்டங்களை கொடுப்பது உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் படும் வேதனைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை விஜயலக்ஷ்மி .
இதுகுறித்து நடிகை விஜயலக்ஷ்மி .கூறியதாது : எந்த வித பின்பலமும் இல்லாமல் ஒரு பெண் நடிக்க வந்தால் அவர்களிடம் முதலில் கேட்பது அட்ஜெஸ்மெண்ட் தான் . சிலர் ஓப்பனாக கேட்பார்கள் சிலர் மறைமுகமாக சீண்டுவார்கள் ஆக மொத்தம் படுக்கைக்கு கண்டிப்பாக அழைப்பார்கள் .
ஒருமுறை இந்த சம்பவம் எனக்கும் ஏற்பட்டது. என்னையும் சிலர் படுக்கைக்கு அழைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை நான் நிராகரித்தால் எனக்கு பல பட வாய்ப்புகள் போனது .
திரையுலகில் எல்லோரும் இப்படி தான் என்று சொல்லவில்லை ஆனால் இன்றும் பலர் புதுமுக நடிகைகளை படுக்கைக்கு அழைத்து தான் வருகிறார்கள் . பெண்கள் நடிக்க வெறும் திறமை மட்டும் இருந்தால் போதாது அனைத்திற்கும் அடிபணிய வேண்டுமென சில விஷமிகள் நினைக்கிறார்கள் என நடிகை விஜயலக்ஷ்மி மனம் திறந்து பேசியுள்ளார் .