கார் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் மீண்டும் மெல்ல எழுந்து நடக்கத் தொடங்கி உள்ளார்.
தனது தோழியை இழந்த மன வருத்தம் மற்றும் உடல் முழுக்க காயங்களும் தையல்களும் என ஆறாத ரணங்களுடன் இருக்கும் யாஷிகா வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த ஜூலை 24ம் தேதி யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரது தோழி வள்ளி செட்டி பாவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடிகை யாஷிகா ஆனந்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
யாஷிகாவின் காலில் ஏற்பட்ட பலத்த காயத்தால் கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருந்தார் யாஷிகா ஆனந்த்.
இந்நிலையில், தற்போது இன்னொரு இன்ஸ்டாகிராம் வீடியோவை நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டு ரசிகர்களை உருக வைத்துள்ளார்.
அதில், தனது காலில் போடப்பட்ட தையல்களையும் யாஷிகா ஆனந்த் காட்டியுள்ளார். மேலும் அதில் என் வலிகளையும், வீழ்ச்சியையும் பார்த்த பின்னரும், நான் வலிமையானவளாக இல்லை என்பதை தெரிந்த பின்னரும் முன்பை போலவே என்னை நேசிப்பீர்களா? என நடிகை யாஷிகா ஆனந்த் கேட்க உருகிப் போன ரசிகர்கள், ‘எப்போதுமே பக்க பலமாக இருப்போம் யாஷிகா’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.