கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவின் அதானி நிறுவனம் கையெழுத்திட உள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தை இயக்கும் உரிமை ஏற்கனவே சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு முனையத்தை மேம்படுத்தி இயக்கும் உரிமம் இந்தியாவின் அதானி குழுமத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணொலி வாயிலாக நடைபெற உள்ள இதற்கான ஒப்பந்தத்தில் அதானி நிறுவனம், இலங்கை துறைமுக அதிகார அமைப்பு மற்றும் ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஆகியவை இன்று கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த வேலைத் திட்டத்திற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்மூலம் மேற்கு முனையத்தின் 51% பங்குகள் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.