கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு (shekhar babu) தெரிவித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் அகத்தீஸ்வரர் கோவிலில் மறுசீரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு (shekhar babu) இன்று தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பழனி கோயில் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நீதிமன்ற இறுதி தீர்ப்பை பொறுத்தே, அரசின் நிலைப்பாட்டை தெரிவிப்போம்.
தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு கிட்டத்தட்ட 1,339 கோவில்களில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருக்கோவில்கள், திருத்தேர்கள், பசுமடங்கள், தங்குமிடங்கள், விருந்து மண்டபங்கள் என்று 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகள் ரூ.4,157 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.
மேலும் மழை, வெள்ள பாதிப்புகளால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு முறையாக நிதி வழங்கவில்லை.
https://x.com/ITamilTVNews/status/1752946290911314274?s=20
தேவைகள் அதிகமாக இருப்பதால் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவை உறுப்பினர்களின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
இதையும் படிங்க : heavy Rain: தென் மாவட்டங்களில் இன்று கனமழை!
இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
2024 – 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்
- முதன்மை சுற்றுலாத் தளமாக லட்சத்தீவுகள் மேம்படுத்தப்படும்,
- ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தப்படும்;
- மின்சார வாகன உற்பத்தி மற்றும் சார்ஜிங் மையங்கள் ஊக்குவிக்கப்படும்;
- 517 நகரங்களில் சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும்;
- 1000 விமானங்கள் புதிதாக வாங்கப்படும்.
- சீர்திருத்தம் , செயலாக்கம், மாற்றம் ஆகியவையே பிரதமர் மோடி அரசின் தாரக மந்திரம்;
- ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும்;
- ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க 1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும்;
- 5 ஒருங்கிணைந்த கடல்சார் பூங்கா அமைக்கப்படும்;
- 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலின் தரத்திற்கு உயர்த்தப்படும்;
- மேலும் சில நகரங்களுக்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும்.
- வட கிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும்;
- சூரிய மின் திட்டத்தின் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்;
- எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு என்பதே நமது அடுத்த இலக்கு;
- கடல் உணவு ஏற்றுமதி 10 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது;
- மீன் வளத்துறையில் புதிதாக 55 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
உள்ளிட அறிவிப்புக்களை வெளியிட்டார்.