ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்(sc, st) நலத்துறையின் ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்வி மற்றும் சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார நலன் தொடர்பான பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரி விடுதிகளை முறையாக பராமரிப்பதை உறுதி செய்யவும், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளை கல்லூரி விடுதிகளாக மாற்றவும் முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து ஆதி திராவிடர், பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த ஆய்வு கூட்டத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளை எந்தவித தாமதமும் இன்றி, உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் என்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக நில நிர்வாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் ஆகியவற்றில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி, வேலைவாய்ப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம், கல்வி உதவித்தொகை ஆகியவற்றை எவ்வித தாமதமுமின்றி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் வி.இறை அன்பு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.