விருமான் , மாவீரன் உள்ளிடப்படங்களில் கதாநாயகியாக நடித்த அதிதி ஷங்கர் தற்போது நடிப்புக்கு பிரேக் போட்டு டாக்டர் வேலைக்கு சென்றுள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அதிதி ஷங்கர். திரையுலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர்போன இயக்குநர் ஷங்கரின் அன்பு மகளான இவர் கார்த்தியின் நடிப்பில் உருவான விரும்பன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் .
கிராமத்து கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் துள்ளிகுதிக்கும் கிராமத்து பெண்ணாக நடித்து தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துவிட்டார் .
இதையடுத்து எஸ்.கே.வின் நடிப்பில் உருவான மாவீரன் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார் . இதைத்தொடர்ந்து சூர்யா – சுதா கொங்கரா படத்தில் நடிக்க இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது அதிதி ஷங்கர் குறித்து ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
மருத்துவ படிப்பில் பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது டாக்டர் வேலையை செய்ய தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . மாவீரன் படத்திற்கு பின் எந்த படத்திலும் இவர் கமிட்டானதாக எந்த ஒரு தகவலும் வெளிவரதா நிலையில் தற்போது தான் படித்து தேர்ச்சி பெற்ற டாக்டர் வேலைக்கே சென்றுள்ளார்.
இதுமட்டுமின்றி டாக்டர் உடையில் இருக்கும் சில போட்டோக்களையும் அதிதி வெளியிட்டு இருக்கும் நிலையில் தற்போது அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.