இஸ்ரோவின் அடுத்த முக்கிய இலக்கான சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’ என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பட்ட நிலையில் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த முக்கிய இலக்காக சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’ என்ற விண்கலம் தயாரிக்கப்பட்டது .

இஸ்ரோ விஞ்ஞானிகளின் பல கட்ட சோதனைகளை வெற்றிகரமாக முடித்த ‘ஆதித்யா எல்-1’ என்ற விண்கலம் விண்ணுக்கு அனுப்ப முழு தேர்ச்சி பெற்ற நிலையில் இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் நேற்று முன்தினம் காலை 11.50 மணிக்கு இந்த விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது .

இந்நிலையில் சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’ என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பட்ட நிலையில் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் திட்டமிட்டபடி இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
100 முதல் 120 நாட்கள் வரை பயணிக்கும் ஆதித்யா L1 விண்கலம் சூரியனின் சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், உள்ளிட்ட ஏராளமான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.