மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த யாஷிகா 95 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு உடல் நலம் தேறி தற்போது மருத்துவர்களுடன் நடக்க பயிற்சி எடுத்து வருகிறார்.
கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த யாஷிகா ஆனந்த் வெள்ளித்திரையில் நடித்ததை தொடர்ந்து விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானதோடு நிறைய பட வாய்ப்புகளையும் பெற்று அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்தது. பிஸியாக நடித்துக் கொண்டிருந்த அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கி கொண்டார்.
இந்த விபத்தில் சீட் பெல்ட் அணியாத யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி செட்டி பவானி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், யாஷிகாவுக்கு காலில் முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
3 மாதங்களுக்கு எழுந்து நடக்க முடியாது படுக்கையிலே ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த யாஷிகா உடல் நலம் தேறி தற்போது மருத்துவர்களுடன் நடக்க பயிற்சி எடுத்து வருகிறார்.
படுக்கையிலே 3 மாதங்கள் வாழ்நாள் போராட்டத்திற்கு பிறகு யாஷிகா, முதல் அடி எடுத்து வைக்கும் வீடியோ தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து மிகப் பெரிய விபத்தில் இருந்து மீண்டு வந்து தன்னம்பிக்கையுடன் இருக்கும் யாஷிகாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.