Red alert for 4 districts |தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

heavy-rain-warning-for-4-districts-in-tamil-nadu-today
heavy rain warning for 4 districts in tamil nadu today

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் தென்மேற்கு வங்க கடல் அதனையொட்டிய இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. அது அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.

heavy-rain-warning-for-4-districts-in-tamil-nadu-today
heavy rain warning for 4 districts in tamil nadu today

இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகைதஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழைக்கான “ரெட் அலர்ட்” கொடுக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts