கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக ரோஜா சீரியல் வில்லி நடிகை அக்ஷயா தனது இன்ஸ்டா பதிவில் கூறியுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. இந்த சீரியலில் அணு கதராபாத்திரத்தில் வில்லியாக சன் டிவியின் தொகுப்பாளினி அக்ஷயா நடித்து வருகிறார்.
இந்நிலையில், அக்ஷயா தனக்கு கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அவர் தன்னை தனிமைப்படுத்தி விட்டதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் தனக்கு ஆரம்பத்தில் மூச்சு விடுவதில் சற்று சிரமம் இருந்தாகவும், அதனால், தான் மருத்துவரை சென்று பார்த்தாகவும் கூறியுள்ளார்.
கொரோனா பரிசோதனைக்கு பிறகு தனக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டு விட்டதால் தன்னை முன்னெச்சரிக்கையுடன் தனிமைப்படுத்தி கொண்டதாகவும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் தனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.