பள்ளிகள் திறந்த 1 மாதத்திலேயே 426 மாணவர்கள், 49 பள்ளி பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால் பொதுமக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது, மாநிலங்களின் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இமாச்சல பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு குறிப்பிட்ட வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டன.
இதனிடையே, பள்ளிகள் திறந்து ஒரு மாதத்தில் இமாச்சல பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் 426 மாணவர்கள், 49 பள்ளி பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பண்டிகை கால விடுமுறையாக நாளை முதல் நவம்பர் 7ம் தேதி வரை பள்ளிகள் தொடர்ந்து மூடப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.