இந்தியா முழுவதும் ‘அக்னிபத் ஆள்சேர்ப்பு திட்டத்திற்கு’ எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லி, அரியானா, ராஜஸ்தான், பீகார், வங்காளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில் ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக பணியாற்றும் அக்னிபத் திட்டத்திற்கான ஆள்சேர்ப்பு விரைவில் துவங்கும் என ராணுவ தளபதி மனோஜ் பண்டே அறிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் பேசிய அவர், இன்னும் 2 நாட்களில் ராணுவத்தின் இணையதளத்தில் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றார்.
மேலும் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் அக்னி பத் திட்டத்தில் இணையும் அக்னி வீரர்களுக்கான பயிற்சிகள் தொடங்கும் என்று அறிவித்த இந்திய ராணுவ தளபதி இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்த்து மேலும் கிடைக்கக்கூடிய சந்தர்பங்களை பயன்படுத்தி நாட்டிற்கு உறுதுணையாகச் செயல்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.