நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவையை தொடங்க இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
நேற்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்த அவர், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசிய நிலையில், இன்று அவர் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது பிரதமர் மோடி மற்றும் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும், யு.பி.ஐ பண பரிவர்த்தனை தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் இருநாட்டு உறவுகள், தமிழக மீனவர்கள் கைது, இலங்கை தமிழர்கள் நலன் போன்றவற்றைக் குறித்து விவாதித்தனர்.
அதில், குறிப்பாக நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தக் கப்பல் சேவையின் தொடக்கப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இலங்கையின் காங்கேசன்துறை வரை இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், யு.பி.ஐ பண பரிவர்த்தனை தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.