இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள், போன்ற தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்பட வட்டார அளவில் whatsapp குரூப்ஸ் (farmers whatsapp groups) உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார்.
385 வட்டார வேளாண் விரிவாக்கம் மையங்களில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உதவியுடன் மின்னணு உதவி மையங்களை செயல்படுத்த ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், அவர் அறிவித்தார். மேலும், விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்க வட்டார அளவில் whatsapp குரூப்ஸ் (farmers whatsapp groups) உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பயிர் சாகுபடி முதல் விற்பனை வரையிலான தொழில்நுட்பம் பற்றிய சந்தேகங்களை விவசாயிகளிடம் நேரடியாக விளக்குவதற்கு வட்டாரத்திற்கு ஒருவர் வேளாண் விஞ்ஞானியாக நியமனம் செய்யப்படுவர். மேலும், கிராம அளவில் வேளாண்மை உழவர் நலத்துறை திட்டங்களை ஒருசேர வழங்க கிராமத்திற்கு ஒரு விரிவாக்க அலுவலர் நியமித்திட வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் நிலையில்,
வேளாண்மை உழவர் நலத்துறையின் அனைத்து சகோதர துறைகளிலும் உள்ள வட்டார கிராம அளவில் பணியாற்றும் விரிவாக்க அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு 4 ஆயிரத்து 311 விரிவாக அலுவலர்கள் மூன்று முதல் நான்கு கிராமங்களுக்கு ஒருவர் என்ற அளவில் நியமிக்கப்படுவார்கள்.
மேலும், வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள் தோட்டக்கலை, மலை பயிர்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் வேளாண்மை பொறியியல் சார்ந்த அனைத்து பணிகளையும் கிராம அளவில் ஒருங்கிணைத்து உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0வாக செயல்படுத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
வட்டார அளவிலான வேளாண் வேளாண் சகோதரத் துறைகளில் களப்பணிகளை அதிகரிக்கும் விதமாக ஆய்வுக்கூடங்கள் அறிக்கைகள் தயாரித்தல் ஆகியவை முறைப்படுத்தப்பட்டு நேரம் மிச்சப்படுத்தப்படுவதனால் விவசாயிகள் மற்றும் அரசுக்கு இடையேயான தொடர்பு வலுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.