தமிழகத்தில் நிலவி வரும் பல பரபரப்பான அரசியல் விவகாரங்களுக்கு மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இன்று மாலை 3:45 மணிக்கு இக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் மக்களவை தேர்தல் கூட்டணி மற்றும் பாஜக உடனான உறவு ஆகியவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .
அண்ணாமலை மற்றும் அதிமுக இடையே ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாடு காரணமாக அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் கடந்த 22ஆம் தேதி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயன்று அது தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது .