அதிமுக வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் கொளத்தூர் டி கிருஷ்ணமூர்த்தி, அதிமுக கே.பி முனுசாமி ஒரு கோடி (1 crore) கேட்டு மிரட்டியதாக குற்றம் சாட்டி, ஆடியோ ஆதாரத்தை ஓபிஎஸ் இல்லத்தில் வெளியிட்டார்..
சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள வீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து விட்டு கொளத்தூர் டி கிருஷ்ணமூர்த்தி ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்…
அப்போது, அவர் பேசிய போது கட்சியின் தியாகி மாதிரி கேபி முனுசாமி பேசிக் கொண்டிருக்கிறார். தர்மத்தின் போது ஓபிஎஸ் மாதிரி ஒரு தலைவர் கிடையாது என்று கூறியவர், கே.பி முனுசாமி தான் என்றும், 2021 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் தன்னிடம் எம் எல் ஏ சீட்டு வாங்கித் தருவதற்கு ஒரு கோடி (1 crore) ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், அது குறித்த ஆடியோ, வீடியோ என்னிடம் உள்ளது என்றும், தற்போது ஆடியோவை வெளியிட்டுள்ளேன்.
இதற்கு இவர் பதில் கூறவில்லை என்றால் அடுத்து வீடியோவும் ரிலீஸ் செய்வேன் என்றும், இது கே பி முனுசாமிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும், அதற்குள் அவர் பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், தற்போது எடப்பாடி பழனிச்சாமி என்பவர் பதவி இல்லாத பழனிச்சாமி என்றும் குற்றம் சாட்டினார்…
நீங்கள் ஏன் லஞ்சம் கொடுத்தீர்கள் என்று நிருபர் கேள்வி கேட்டதற்கு, கே.பி முனுசாமிக்கு நான் பணம் கொடுத்தது தவறாக தெரியவில்லை, அப்போதைய சூழலில் காரியம் நடந்தால் போதும் என்று நினைத்ததாகவும் பதில் அளித்தார்.