பொங்கல் பண்டிகை காரணமாக, சென்னையிலிருந்து கோவை, மதுரை, தூத்துக்குடி, மதுரை நகரங்களுக்கான விமான கட்டணங்கள் (Air fares) பல மடங்கு அதிகரித்துள்ளன.
தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை பொங்கல் பண்டிகை. 3 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டிகையை பெரும்பாலான மக்கள் கிராமங்களில் கொண்டாடுவார்கள்.
இதன் காரணமாக பணி நிமிர்ந்தம் காரணமாக வெளி ஊர்களில் தங்கி இருக்கும் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை நாளை போகி பொங்கலுடன் தொடங்குகிறது. புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாளை மறுநாள், பொங்கல் பண்டிகை அதாவது வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 16ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17ம் தேதி உழவர் திருநாள் ஆகிய பண்டிகைகள் கொண்டாப்பட உள்ளது.
இதையடுத்து சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வேலைக்காக சென்றவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று முன்தினம் இருந்தே செல்லத் தொடங்கி உள்ளனர்.
சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நேற்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது,
இதையும் படியுங்க : https://itamiltv.com/bank-holidays-for-pongal-festival-and-do-you-know-banks-shut-for-5-days-from-today-in-tamil-nadu/
கடைசி நேரத்தில் ரயில்கள், பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்கள் தற்போது விமானங்களை நாடத் தொடங்கியுள்ளனர்.
இதனால் சென்னையிலிருந்து மதுரை, கோவை, தூத்துக்குடி, சேலம் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நகரங்களுக்கான விமான கட்டணங்களின் (Air fares) விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.3,624 வசூலிக்கப்படும் நிலையில், ரூ.13,639 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரைக்கான கட்டணம் ரூ.3,367 ரூபாயிலிருந்து ரூ.17,262 ஆகவும். திருச்சிக்கு தற்போது ரூ.11,369 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
https://x.com/ITamilTVNews/status/1746068495950074321?s=20
கோவைக்கான கட்டணம் ரூ.14,689 ஆகவும், சேலத்துக்கு ரூ.11,329 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பலருக்கு டிக்கெட் கிடைக்காத நிலையில், சிறப்பு பேருந்து, ரயில் போல் சிறப்பு விமானங்களையும் இயக்க வேண்டும் என பலரும் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.