ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்டம் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமத்தில், ஏர்வாடி தர்ஹாவில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிம் ஷாஹித் ஒலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று 13.06.2023 செவ்வாய்கிழமை “உள்ளூர் விடுமுறை” அறிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 24.06.2023 அன்று சனிக்கிழமையினை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது. மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 24.06.2023 அன்று வழக்கம்போல் இயங்கும்.
இந்த உள்ளூர் விடுமுறை நாள் 13.06.2023 செவ்வாய்கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.