நாளை முதல் 3 நாட்களுக்கு மயிலாடுதுறைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கனமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வ விடுக்கப்பட்டுள்ளது அதில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
Also Read : நவம்பர் 28 ஆம் தேதி எம்.பி.யாக பதவி ஏற்கிறார் பிரியங்கா காந்தி..!!
இந்நிலையில் கனமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன; மொத்தம் 12 தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளை முதல் 3 நாட்களுக்கு மயிலாடுதுறைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மழை சேதம் தொடர்பான புகார்களை 1077, 04364-22288 என்ற எண்ணில் மக்கள் தெரிவிக்கலாம் என ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.